சக்திவாய்ந்த தொலைநோக்கியின் புகைப்படம் வெளியீடு விண்வெளியில் ஜொலிக்கும் விண்மீன் திரள்கள்: ஜோ பிடன், கமலா ஹாரிஸ் மகிழ்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியின் முதல் விண்வெளிப் படங்களைப் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட படங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தொலைநோக்கியானது 20 ஆண்டுகளுக்கு செயல்படுவதற்கு போதுமான கூடுதல் எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களை படத்தில் காணலாம்.  இதுவரை கவனிக்கப்படாத மங்கலான பொருள்களும் இந்தப் படத்தில் இருப்பதாக நாசா  கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர்  சக்திவாய்ந்த தொலைநோக்கியின் முதல் விண்வெளிப்  படங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

  இதுகுறித்து அதிபர் ஜோ பிடன் வெளியிட்ட பதிவில், ‘இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்... அமெரிக்கா மற்றும் அனைத்து மனித இனத்திற்கும் இதுவொரு வரலாற்று தருணம்’ என்று கூறியுள்ளார். அதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்ட பதிவில், ‘இன்றைய தினம் நம் அனைவருக்கும் மிகவும் உற்சாகமான தருணம். இன்று பிரபஞ்சத்தில் புதிய அத்தியாயம் ஒன்று படைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: