வானிலை சீரானதை அடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் பனிலிங்க தரிசனம் செய்வதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதுவரை 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் பனிலிங்க தரிசனம் செய்யும் குகை கோயில் அருகே 8ம் தேதி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேரை காணவில்லை. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் பக்தர்கள் யாரும் யாத்திரையை தொடர அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று வானிலை சீரானதை அடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. 4026 பேர் அடங்கிய 12வது குழு நேற்று அதிகாலை 110 வாகனங்களில் புறப்பட்டு சென்றது.

Related Stories: