சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 21ம் தேதி குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 21ம் தேதி திருக்குடமுழுக்கு  நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிக்காக இன்று  காலை பந்தகால் நடும் பணி நடைபெற்றது.

இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றது. முருகம்மையார் எனும் அடியாருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த சிறப்பு மிக்க தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. திருக்கோயில் முழுவதும் பழுதுபட்டு சிதிலமடைந்து காணப்பட்டது.  கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இத்திருக்கோயிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் துவக்கப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது.

மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்வசதி  ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் ஆகிய திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆவணி 1ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஐந்து நாட்கள் யாகசாலைகள் பூஜைகள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 9 - 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செய்து வருகிறது.

Related Stories: