படவேடு அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டெருமைகள்

கண்ணமங்கலம்: திருவண்ணாலை மாவட்டம், ஜவ்வாது மலை தொடர்ச்சியான வள்ளிமலை அடிவாரத்தில் சந்தவாசல், படவேடு, ராமநாதபுரம், மங்களாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் வாழை, மஞ்சள், கரும்பு, நெல் ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இரவு நேரங்களில் அருகில் உள்ள மலைகளிலிருந்து காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தூக்கமின்றி காவல் காத்து வருகின்றனர்.

மேலும், இவற்றை தடுக்க மங்களாபுரம் பகுதியில் விவசாயிகள் அரை கிலோ மீட்டர் தூரம் பள்ளம் எடுத்துள்ளனர். மேலும் ராமநாதபுரம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளம் எடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க ேகாரி வனத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காட்டு எருமைகளின் படையெடுப்பும் தொடங்கியுள்ளதால் செய்வது அறியாமல் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: