மும்பை: இந்தியில் ‘ஷாகித்’, ‘சிட்டிலைட்ஸ்’, ‘அலிகார்’, ‘சிம்ரன்’ உள்பட பல படங்களை இயக்கியவர், ஹன்சல் மேத்தா. அவர் இயக்கிய ‘சிம்ரன்’ படத்தில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இந்நிலையில், கங்கனாவை அவர் கடுமையாகச் சாடியுள்ளர். அவர் கூறியதாவது:
சிம்ரன் என்ற கேரக்டர், சந்தீப் கவுர் என்ற பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டது. அந்தப் பெண் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு, பிறகு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர். அவரைப்போலவே நாங்கள் கங்கனா கதாபாத்திரத்தை எழுதினோம்.