வரலாற்றில் முதல்முறை நேபாளத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றுமதி: உபி வழியாக வந்தது 3,000 மூட்டை

புதுடெல்லி: வரலாற்றில் முதல் முறையாக நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி தொடங்கி உள்ளது.அண்டை நாடான நேபாளத்தில் சிமென்ட் தயாரிப்பதற்கான தரமான மூலப் பொருட்கள் அதிகளவில் கிடக்கின்றன. எனவே, இங்கு சிமென்ட் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. 50க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள்  உள்ளன. இவை 2.2 கோடி டன் சிமென்ட்டை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன. ஆனால், இந்த நாட்டில் சிமென்ட் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதால், சிமென்ட் ஆலைகள் நலிந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த பட்ஜெட்டில் நேபாள அரசு 8 சதவீதம் ஏற்றுமதி மானிய  சலுகையை அறிவித்தது.  இதையடுத்து, இந்நாட்டில்  நாவல்பாரசி மாவட்டத்தில் இயங்கி வரும்  ‘பல்பா சிமென்ட் நிறுவனம்,’ இந்தியாவுக்கு நேற்று 3 ஆயிரம் மூட்டை சிமென்ட்டை ஏற்றுமதி செய்தது. இது, உத்தர பிரதேசத்தில் உள்ள சுனாவ்லி எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இதன்மூலம், நேபாளத்தின் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி தொடங்கப்பட்டு உள்ளது.

Related Stories: