பக்ரீத் குர்பானிக்காக நாகூரில் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு குவிந்துள்ளது

நாகப்பட்டினம் : பக்ரீத் குர்பானிக்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து நாகூரில் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.இறைவனின் கட்டளையை ஏற்று தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகையின் போதும் அடுத்த 3 நாள்களுக்கும் ஏழை, எளியோருக்கும், குடும்பத்தினருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை (10ம் தேதி) நடைபெறுகிறது. பக்ரீத் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் நாகூரில் 200-க்கும் அதிகமான ஆடுகள் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும்.

இதன்படி இந்த ஆண்டு குர்பானிக்காக 500-க்கும் அதிகமான செம்மறி ஆடுகள் உளுந்தூர்பேட்டையில் இருந்து நாகூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை (10ம் தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் ஆடுகள் கொண்டு வரப்படுகின்றன. உளுந்தூர்பேட்டையிலிருந்து கொண்டு வரப்படுள்ள ஒரு ஆடு ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரம் வரை விலை போகும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு ஆடு ரூ.2 ஆயிரம் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தினர். மேலும் நாகூரில் தர்கா குளம் உள்ளிட்ட 7 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்ய குவிந்துள்ளது.

Related Stories: