மேகமலை பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்-தொழிலாளர்கள் பீதி

சின்னமனூர் : சின்னமனூர் அருகே ஹைவேஸ், மேகமலை உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்களில் பணப் பயிர்களான தேயிலை, ஏலம், மிளகு, காப்பி உள்ளிட்ட விசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. சுமார் 1.50 லட்சம் ஏக்கரளவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் அதிகளவு வாழ்ந்து வருகிறது. இதனால், மேகமலை வன உயிரின சரணாலயமாக விளங்கி வருகிறது. இதனால், இந்த மலைப்பகுதி தொடர்ந்து மத்திய வன பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வனங்களுக்குள் யானைகள், காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தை உள்ளிட்ட பல விலங்கினங்கள் சர்வ சாதாரணமாக சாலைகளில் உலா வருகின்றன.

சில நேரங்களில் இந்த வனவிலங்குகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மாட்டு கொட்டகை, காய்கறிகள் தோட்டங்களை சேதப்படுத்தி செல்லும். இந்நிலையில், மகாராஜன் மெட்டு மலைக்கிராமத்தில் உள்ள தோட்ட பகுதியில் வழிதவறி வந்த ஒற்றை யானை சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் வனவிலங்குகளை உரிய முறையில் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: