‘எம்.பி. பதவியை நான் எதிர்பார்க்கவில்லை’: சேலத்தில் பி.டி.உஷா பேட்டி

சேலம்: மாநிலங்களவை எம்பி பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சேலத்தில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறினார். சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் 7 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

போட்டியை முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி எனக்கு வழங்கியிருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கவுரவம். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடத்துள்ள அங்கீகாரம். நான் இதனை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போது, விளையாட்டுத் துறை சார்ந்த கோரிக்கைகளை அதிகமாக முன்வைப்பேன்.

விளையாட்டுத்துறைக்கு பிரதமர் மோடி, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் அடுத்த ஒலிம்பிக்கில் நமது வீரர்களிடம் இருந்து நிறைய பதக்கங்களை எதிர்பார்க்கலாம். தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: