உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டபோது ரஷ்ய ராணுவ தாக்குதலில் பிரேசில் மாடல் அழகி பலி

கீவ்: நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 5வது மாதமாக தொடர்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் நாட்டை சேர்ந்த துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற மாடல் அழகி தலிதா டோ வாலே (39), ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வந்தார். பல நாட்கள் அமைதியாக இருந்த ரஷ்யா, கடந்த மாதம் 30ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ், வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரத்தின் மீது மீண்டும் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், மாடல் அழகி தலிதா இறந்துள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தலிதாவைக் கண்டுபிடிக்க பதுங்கு குழிக்குச் சென்ற முன்னாள் பிரேசில் ராணுவ வீரர் டக்ளஸ் புரிகோவும் உயிரிழந்தார்.

Related Stories: