கும்பகோணம் அருகே சாலையோரம் பதுக்கி வைத்திருந்த உலோக சுவாமி சிலைகள் பாவை விளக்குகள் பறிமுதல்: இருவர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாச்சியுடன் கூடிய அம்மன் சிலை, இரு பாவை விளக்குகள் ஆகியவை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் ராம்நகர் பாலம் அருகே சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்நேற்று முன்தினம் காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றனர். அப்போது, அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது, அவர்கள், கும்பகோணம் தாலுகா தேனாம்படுகையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குருசேவ் (42) , மற்றொருவர் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த செல்வராஜ் மகன் பவன்ராஜ் (36) என்பதும் தெரியவந்தது, , அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதையடுத்து, பவுன்ராஜ் சாலையின் ஒதுக்குபுறமாக மறைத்து வைத்திருந்த கோனிப்பையின் உள்ளே வெள்ளை நிற துணியில் மறைக்கப்பட்டிருந்த 37 செ.மீ உயரம், 23 கிலோ எடையில் உலோகத்தினால் ஆன நாகலிங்கம் சிலை, 29 செ.மீ உயரம் சுமார் ஐந்து கிலோ எடையில் திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, மற்றும் 43.5 செ.மீ உயரம் சுமார் 5 கிலோ எடையில் உலோகத்திலான இரு பாவை விளக்கு சிலைகள் ஆகியவற்றை எடுத்து காண்பித்தனர்.

சிலைகள் ஏதேனும் கோயிலில் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை கைப்பற்றி பறிமுதல் செய்து, எஸ்ஐ செல்வராஜ் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து, சென்னையில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, நேற்று காலை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரணை செய்த நீதிபதி 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் அந்த சிலைகள் கும்பகோணம் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Related Stories: