வேலூர் அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார். காட்பாடியை சேர்ந்த 20 வயதான சதீஷ்குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதான யாஷினி என்பவரை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்தார். இந்நிலையில்  யாஷினி வேறு யாருடனோ தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்த சதீஷ்குமார், இன்று காலை  கல்லூரி செல்வதற்காக திருவலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியை கத்தியால் குத்தினார்.

மாணவியை கத்தியால் குத்திய மாணவன் சதீஷ்குமார், வேலூரில் உள்ள ஆர்த்தோ டெக்னீசியன் சோர்ஸ் படிப்பையும், மாணவி யாஷினி ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இருவரும் கல்லூரி செல்வதற்காக இன்று காலை பேருந்து நிலையம் வந்தபொழுது, சதீஷ்குமார் மாணவியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், அம்மாணவி மாணவன் சதீஷ்குமாரை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் பேசியதாக எண்ணி இச்சம்பவத்தை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கத்திகுத்து அடைந்த மாணவியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் சதீஷ்குமாரை, திருவலம் கால்துறையினர் பிடித்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்குள்ள  மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

Related Stories: