ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து

பிரசல்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவுடன் மிகப் பெரிய எல்லையை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து கடந்த மே மாதம் விண்ணப்பித்தன. இதனால், இவ்விரு நாடுகளும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ரஷ்யா எச்சரித்தது. இந்நிலையில், நேற்று நடந்த நேட்டோ கூட்டத்தில், பின்லாந்து, ஸ்வீடனை நேட்டோவில் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள 30 நாடுகள் கையெழுத்திட்டன.

Related Stories: