ரெட் மற்றும் கோ டேக்சிசிகள் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதை தடுக்க கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி :  ரெட் மற்றும் கோ டேக்சிசிகள் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சிகேப் ஓட்டுநர்கள் சங்க தலைவர் கோவர்தன்  தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் அதிகளவிலான தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே தொழில் பலரும் தொழில் செய்து வருகின்றனர்.

சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ேடார் சுற்றுலா வாகன ஓட்டுநர்களாக உள்ளனர். இந்நிலையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களான ரெட்டேக்சிசி, கோ டேக்சி போன்ற கால்டேக்சி வாகனங்கள் சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், ரெட் டேக்சி மற்றும் கோ டேக்சி வானங்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது.

இதில், வெளியூர்களில் இருந்து வரும் இது போன்ற வாகனங்கள் சுற்றுலா பயணிகளை ஊட்டியில் இறக்கவிட்டு செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த உத்தரவினை மதிக்காமல் மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதாக தெரிகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

Related Stories: