வாடிகனில் பரபரப்பு போப் ராஜினாமா?

ரோம்:  போப் பிரான்சிஸ் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று பேட்டி அளித்த போப் பிரான்சிஸ், ‘‘முன்கூட்டியே ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை.  முட்டியில் வலி, தசைநார் வீக்கமாக இருந்தபோது சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகின்றேன். தற்போது சிகிச்சையின் மூலமாக மெதுவாக குணமடைந்து வருகிறேன். விரைவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் செல்லவும் தீர்மானித்துள்ளேன்’’ என்றார்.

Related Stories: