ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று விவசாய கிணறுகளில் நீச்சல் பழகிய பள்ளி சிறுவர்கள்

கலசபாக்கம் : கலசபாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் பள்ளி சிறுவர்கள் நீச்சல் பழகி மகிழ்ந்தனர்.கலசபாக்கம் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக, பெரும்பாலான ஏரிகள், குளங்கள் முழுமையாக நிரம்பின. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோடைகாலங்களில் நகர்புறங்களில் உள்ள சிறுவர்கள் நீச்சல் குளங்களுக்கு சென்று நீச்சல் பழகுவது வழக்கம். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சென்று விவசாய கிணறுகளில் நீச்சல் பழகுவதும், ஆனந்த குளியல் போடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நீச்சல் பழகுவதால் ஆரோக்கியமும், தைரியமும் கூடும் என்பதால், விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணறுக்கு அழைத்து சென்று, தங்களது கண்காணிப்பில் பாதுகாப்புடன் நீச்சல் பழக கற்று கொடுக்கின்றனர்.இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை நாள் என்பதால், கலசபாக்கம் பகுதியில் உள்ள பள்ளி சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சென்று, விவசாய கிணறுகளில் நீச்சல் பழகியதுடன், குளியல் போட்டு மகிழ்ந்தனர்.இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் விடுமுறை தினமான நேற்று வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விவசாய கிணறுகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Related Stories: