தமிழகம் தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு; அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு Jun 16, 2021 தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட நீர் கல்லணை குறுவை தஞ்சாவூர் குருவாய் தஞ்சாவூர் டெல்டா மாவட்டம் மேட்டூர் காவேரி டெல்டா தஞ்சாவூர் காவிரி டெல்டா மாவட்டம் தஞ்சை: தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் திறப்பையொட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். … The post தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு; அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.
வெள்ளப் பெருக்கால் திற்பரப்பில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை
சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை : பொது சுகாதாரத்துறை
மக்கள் பங்களிப்பு மூலம் புதுப்பிப்பு வீணாகிறது நெல்லை வேய்ந்தான்குளத்தில் சாக்கடை கலந்து துர்நாற்றம் எடுக்கும் அவலம்
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்