போதிய மழை இல்லாததால் வறண்டது கருப்பாநதி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

கடையநல்லூர் : கடையநல்லூர் கருப்பாநதி அணையில் தண்ணீர் வற்றியதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை உள்ளது. இந்த அணையில் மீன்கள் வளர்ப்பதற்கு ஆண்டுதோறும் மீன்வளத்துறை சார்பில் குத்தகைக்கு விடுவது வழக்கம். இந்தாண்டும் கட்லா, கண்ணாடி கட்லா கெண்டை, பன்னா, கெளுத்தி போன்ற மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் தண்ணீர் இருப்பு குறைந்தது. தொடர்ந்து வெயில் கொளுத்தியதால் தற்போது அணையும் வறண்டது. இதனால் மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: