மலேசியா ஓபன் பேட்மின்டன்: ஆக்செல்சன் சாம்பியன்

கோலாலம்பூர்: மலேசியா ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் விக்டர் ஆக்செல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் நட்சத்திரம் கென்டோ மொமோடோவுடன் (27 வயது) நேற்று மோதிய நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஆக்செல்சன் (28 வயது, டென்மார்க்) அதிரடியாக விளையாடி 21-4, 21-7 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். ஆக்செல்சன் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இப்போட்டி 34 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

Related Stories: