உல்லாசமாக இருந்த வீடியோக்களை இளம்பெண்ணுக்கு அனுப்பி மிரட்டல்: வாலிபருக்கு வலை

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா(28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவருக்கு சரியான வேலை இல்லாத காரணத்தால் கொளத்தூர் பகுதியில் உள்ள பிரவுசிங் சென்டரில் பிரியா வேலை பார்த்துள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலம்(28) என்பவர் பிரியாவிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல அருணாச்சலத்தின் தொல்லை தாங்காமல் பிரியா அவரை விட்டு விலக ஆரம்பித்துள்ளார். அதன்பிறகு வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் பிரியாவுடன் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டி பிரியாவை மிரட்டி மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். பிரியா வர மறுத்ததால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் பிரியாவின் கணவருக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை தேடிவருகிறார்.

Related Stories: