ஈளடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈளடா, கதகட்டி, கெரடாமட்டம், கைக்காட்டி, ஓம்நகர், வார்விக், புதூர், கேர்ப்பட்ட போன்ற 20-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக ஈளடா தடுப்பணை விளங்குகிறது. இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் பெய்த தொடர் மழைக்காரணமாக தற்போது அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 12 அடியை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் மாதங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தடுப்பணைப் பகுதிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: