பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியாவில் அனுமதிக்க முடியாது; வைகோ அறிக்கை

சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நுபூர்  சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து உதய்பூரில் தையல் கடை  நடத்தி வந்த கன்னையா லால் கருத்து  தெரிவித்ததால் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள்  செய்வதைப்போல அவரது தலையை வெட்டி, அதை பகிரங்கமாக சமூக  வலைதளங்களில் பதிவேற்றி இருக்கும் கொடூரம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் இந்நாட்டில் அனுமதிக்க  முடியாது. மத அடிப்படை வாதம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது  என்பதை மதவெறியர்கள் யாராக இருந்தாலும் உணர வேண்டும். சகிப்பின்மையையும்,  வெறுப்பு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: