கால்நடை மருந்தகத்தின் மின்சாரத்தை துண்டித்து ஆழ்துளை கிணற்றில் காப்பர் வயர் அபேஸ்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கால்நடை மருந்தகத்திலிருந்த மின்சாரத்தை துண்டித்து ஆழ்துளை கிணற்றிலிருந்த காப்பர் கேபிள் வயரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.  பள்ளிப்பட்டு அருகே  நொச்சிலி கிராமம் உள்ளது.  இங்கு  கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதியைச்  சேர்ந்த கால்நடை வளர்ப்போர், தங்களது  கால்நடைகளுக்கு  பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதி பெற்று பயன் பெற்று வருகின்றனர்.

இந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது. மேலும், இங்குள்ள விவசாய நிலத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர்   கால்நடை மருந்தகம் சுற்றி பாறை கற்கல் போட்டுள்ளார். இதனால்,   மருந்தகத்திற்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல  முடியாமல் கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மருந்தகத்திற்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் மூலம்  அலுவலக பணியாளர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர்  பயன்ப்படுத்தி வந்தனர்.

இதனைடுத்து நேற்று முன்தினம் இரவு  மர்ம நபர்கள் கால்நடை மருந்தகத்தில் உள்ள மின் வினியோகத்தை துண்டித்து, ஆழ்துளை கிணறு மின் மோட்டார் கேபிள் வயரை  திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  கால்நடை மருந்தகம் உதவி மருத்துவர்  செந்தில்குமார், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி  போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: