கொலை மிரட்டல்; வாலிபர் மீது போலீசில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (30). இவரது வாட்ஸ்அப்பில் தனது மகனுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், ரூ.3 லட்சம் கேட்டு தரவில்லையென்றால் தனது குழந்தையையும், குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டி தகவல் வந்துள்ளதது.

இந்நிலையில், கொலை மிரட்டல் மற்றும் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய ஈக்காடு பகுதி பெத்தானிய வள்ளியம்மா கோயில் தெரு சேர்ந்த சுபாஷ் ஜோசப் (23) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டில்லிபாபு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: