பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையம் செயல்பாட்டிற்கு வருமா?: மக்கள் எதிர்பார்ப்பு

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தது. அந்த மைய கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்திருந்தது. அதனால், கடந்த 2019-20 நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. அப்பணிகள் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

இந்நிலையில் கட்டிடப் பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையிலும, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. மேலும், அங்கு இயங்கி வந்த அங்கன்வாடி மையங்கள் இரண்டும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் ஏறி செல்வதற்கு ஏற்றவாறு படிக்கட்டுகள் இல்லை. எனவே, கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையங்களை திறந்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு ெகாண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: