ஆற்றில் செத்து மிதந்த ஆடுகள் தண்ணீரில் விஷம் கலப்பு?

சூலூர்: சூலூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஆடுகள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சூலூர் படகுத்துறை அருகே நொய்யல் ஆற்றில் ஆடுகள் செத்து மிதந்து கிடப்பதாக நேற்று இரவு சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் படகு மூலம் உள்ளே சென்று ஆற்றில் செத்து மிதந்து கொண்டிருந்த 8 ஆடுகளை வெளியே எடுத்து. குழிதோண்டி  புதைத்தனர். ஆடுகளின் உரிமையாளர் யார், ஆடுகள் எப்படி இறந்தது, ஆற்று நீரில் விஷம் கலக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: