கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!

நீலகிரி: கொடைக்கானல் அருகே பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து வனத்துறையால் கட்டப்பட்டிருக்கும் அறை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நெகிழி பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வனத்துறை சார்பில் கொடைக்கானலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் மன்னவனூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு அறை கட்டப்பட்டுள்ளது.  

பிளாஸ்டிக் பாட்டில்களில் மண்ணை அடைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த அறை பார்ப்பதற்கு தத்ரூபமாக செங்கல் கட்டிடத்தை போலவே காட்சியளிக்கிறது. இந்த பிளாஸ்டிக் பிளாஸ்டிக் வீடு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. கொடைக்கானலை பின்பற்றி பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு வழி இல்லாத இடங்களில் இதேபோன்று கட்டிடங்களை கட்டலாம் என்று சுற்றுலா பயணிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories: