லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லாரியில் சென்ற போது மூச்சுத் திணறி இறந்த அகதிகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இது போலீசார் உள்ளிட்ட சிலர் நடத்திய ஆட்கடத்தல் முயற்சி என்று அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆன்டோனியோ என்ற இடத்தில் ஒரு லாரியின் பின்புறத்தில் 46 அகதிகள் சடலங்களாக கிடந்தார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 அகதிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவர்கள் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவும் 103 டிகிரி பேரன்ஹீட் வெயிலுக்கு நடுவே லாரியில் கடத்தி கொண்டு செல்லப்பட்ட பிற நாட்டு அகதிகள் ஆவார்கள்.மெக்சிகோ வழியாக அகதிகளாக புகுந்தவர்களை போலீசாரே கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே லாரியில் அனைவரையும் அடைத்து சென்றதால் மூச்சுத் திணறியும் தண்ணீர் இல்லாமலும் அதீத உஷ்ணத்தாலும் 51 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் தனது இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 22 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 7 பேர் கெளத்தமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதற்காக அகதிகள் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. 

Related Stories: