கமுதி அருகே ஊருணியில் மீன்பிடி திருவிழா-அயிரை,கெளுத்தி சிக்கின

கமுதி : கமுதி அருகே ஊருணியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் அயிரை, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் சிக்கின.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சி எம்.பச்சேரி கிராமத்தில் உள்ள ஊருணியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். மீன் வலைகள், கச்சா வலைகள் கொண்டு மீன்பிடித்தனர். இதில் கெண்டை, அயிரை, கெளுத்தி, விரால், குரவை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இந்த மீன்பிடி திருவிழாவால் கிராமத்தில் அனைவரது வீடுகளிலும் மீன்குழம்பு கமகமத்தது.

Related Stories: