பறவை மோதியதால் கோளாறு ஹெலிகாப்டர் விபத்தில் தப்பினார் ஆதித்யநாத்

வாரணாசி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வாரணாசியில் நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆதித்யநாத் நேற்று முன்தினம் வந்தார். அதில் பங்கேற்ற பிறகு, அவர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், அவர் நேற்று அங்கிருந்து லக்னோவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் கோளாறு ஏற்பட்டது.

இதனால், ஹெலிகாப்டரை விமானி அவசரமாக தரையிறக்கினார். இதன் காரணமாக, விபத்து தவிர்க்கப்பட்டது. அரசு விருந்தினர் மாளிகை சென்ற ஆதித்யநாத், அங்கிருந்து வாரணாசி விமான நிலையம் சென்று விமானத்தில் லக்னோ சென்றார்.

Related Stories: