விபத்தை தடுத்த ரயில்வே ஊழியருக்கு வீரதீர விருது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ரயில் விபத்தை தடுத்த ரயில்வே ஊழியருக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷன் பகுதி தண்டவாளத்தில் கடந்த 17ம் தேதி காலை விரிசல் ஏற்பட்டது.

இதனை உரிய நேரத்தில் கண்டுபிடித்த ரயில்வே கீமேன் வீரபெருமாள் 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவப்பு கொடியை காட்டி சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உரிய நேரத்தில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய கீ மேன் வீரபெருமாளுக்கு அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் வீரதீர ஊழியர் விருதை அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளருமான முஹமது சலாவுதீன் நேற்று வழங்கினார்.

Related Stories: