தொடர் மழை எதிரொலி செடியிலேயே அழுகும் முட்டைகோஸ்-விவசாயிகள் வேதனை

கோத்தகிரி :  தொடர்ந்து பருவமழை பெய்து வருதால் செடியிலேயே முட்டைகோஸ்கள் அழுகி வருகின்றன. இதனால்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், முட்டை கோஸ் பயிர்கள் செடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா,ஈளடா,கேர்கம்பை,ஆடத்தொரை, பாண்டியன் பார்க்,மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பயிரான முட்டை கோஸ் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையின் தாக்கத்தினால் முட்டை கோஸ் பயிர்கள் அழுகத் தொடங்கி உள்ளன. காய்கறி சந்தைகளில் நல்லவிலை கிடைக்கும் நிலையில் தற்போது மழை பெய்து அறுவடைக்கு தயாரான நிலையில் தோட்டத்திலேயே முடைகோஸ்கள் அழுகி தோட்டங்களில் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என முட்டை கோஸ் பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: