அமெரிக்காவில் திருப்புமுனை; துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேறியது: விரைவில் பிரதிநிதிகள் சபையில் தாக்கல்

வாஷிங்டன்:  அமெரிக்காவில் 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய துப்பாக்கியை சர்வ சாதாரணமாக வாங்க முடியும். இதனால், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இந்த  வன்முறை கலாசாரத்துக்கு கிடுக்கிபிடி போடும், ‘துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா’ நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இழுபறியில் இருந்து வந்தது. ஆனால், கடந்த மாதம் நியூயார்க் மற்றும் டெக்சாசில் குறிப்பாக பள்ளிகள், தேவாலயங்களில் நடந்த தொடர் துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் இதன் ஆபத்தை உணர்ந்தன.

எனவே, துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர துப்பாக்கி விற்பனைக்கு கட்டுப்பாட்டு விதிக்கும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தன. இந்நிலையில், இந்த மசோதா செனட் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை ஆதரித்து 65 எம்பி.க்களும், எதிர்த்து 34 பேரும் வாக்களித்தனர். 30 ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது, அமெரிக்காவில் பெரிய திருப்பு முனையாக கருதப்படுகிறது.

இந்த மசோதாவின்படி, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் துப்பாக்கி வாங்கச் சென்றால் அவர்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த வார இறுதியில் மசோதா, பிரதிநிதிகள் சபையிலும் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

Related Stories: