நெல்லையில் இன்று முதல் டிஎன்பிஎல் தொடக்கம்

திருநெல்வேலி: இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம்-நெல்லை அணிகள் களம் காண உள்ளன.டிஎன்பிஎல் போட்டியின் 6வது தொடர் இன்று நெல்லையில் தொடங்குகிறது. மொத்தம் 2 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர்  நெல்லை,  திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறும். கொரோனா விதிகள் தளத்தப்பட்டு உள்ளதால் ஆட்டங்களை காண 100சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.இந்திய அணியில் ஆடிய  முரளி விஜய், டி.நடராஜன், விஜய் சங்கர்,  ஐபிஎல் தொடர்களில் இடம்பிடித்த  அருண் கார்த்திக்,  முருகன் அஷ்வின் , ஜி.பெரியசாமி சாய் கிஷோர், பாபா இந்திரஜித், அபரஜித், நாரயண் ஜெகதீசன், மணிமாறன் சித்தார், சாய் சுதர்சன், ரகுபதி சிலம்பரசன், செழியன் ஹரிநிஷாந்த், சதுர்வேத் என பெரும் படையே இந்த தொடரில் கலக்க காத்திருக்கின்றது.

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த தொடரில்  மொத்தம் 28லீக் ஆட்டங்கள்,  ஜூலை 24ம் தேதி வரை நடக்கும்.  அத்துடன் பிளே ஆப் சுற்றில் பைனல் உட்பட 4 ஆட்டங்கள் நடைபெறும்.  இறுதி ஆட்டம் ஜூலை 31ம் தேதி கோவையில் நடக்க உள்ளது.

இன்று நெல்லையில்  நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணிகள் களம் காணுகின்றன.

Related Stories: