காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது: தமிழக அரசு கோரிக்கையை ஏற்று மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேகதாது அணை குறித்து இரு வெருகருத்துகள் முன் வைக்கப்பட்டுவந்தன. குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது ஆணை குறித்து விவாதிக் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 2-வது முறையாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைக்க அனுமதிக்க கூடாது. அதேபோல் நீர்வளத்துறை அமைச்சகத்தின் வரக்கூடிய இந்த ஆணையம் அல்லது மற்ற ஏதாவது ஒரு அமைப்புகள் இது சம்பந்தமான எந்தஒரு கோப்புகளையும் பரிசீலிக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். எனவே அரசியல் ரீதியிலான ஒரு அழுத்தம் உருவாகியுள்ள காரணத்தால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதத்தை விவாதிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் தமிழகம் வந்திருந்த இந்த ஆணையத்தின் தலைவர் நிச்சயமாகா மேகதாது அணை குறித்து விவாதிப்போம், எதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என கூறினார். இது கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவிவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றால் அது சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் அதில் இருந்து ஒதுங்கி இருப்பார்கள் தற்காலிகமாக அந்த விவகாரம் குறித்த விவாதங்களை தவிர்த்துவிடுவது வழக்கம். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எதற்காக இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தார் என்பது பெரும் கேள்விகளாக எழுந்துள்ள சூழல், இந்த விவகாரம் தமிழத்தில், கர்நாடகத்திலும் மிக அழுத்தமான ஒரு விஷயமாக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்த ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை ஒன்றிய அமைச்சர் உடனான சந்திப்பு, அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் எல்லாம் அடுத்து வரக்கூடிய கூட்டத்தில்  முக்கியமாக கருத்தப்படும். அதற்க்கு முன்னாள் உச்சநீதிமன்றத்தின் விடுமுறைகள் எல்லாம் முடிந்து, உச்சநீதிமன்றத்தின் இந்த விவகாரம் அவசர விவகாரமாக தமிழக அரசு எடுத்து  செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

நாளை தினம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆலோசனையும் நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்படியான சூழலில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு ஒரு சாதகமாக பார்க்கப்படுகிறது.

Related Stories: