திருமங்கலம் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டதாக போலீஸ்காரர் உள்ளிட்ட நான்குபேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா(20). இவருக்கும், திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்த காசிநாதன் மகன் செல்வகுமார்(30) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. செல்வகுமார் கோவையில போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின் போது சங்கீதா வீட்டினர் 33 பவுன்நகை மற்றும் சீர்வரிசை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மேலும் வரதட்சணையாக மனைவியிடம், டூவிலர் மற்றும் பணம் கேட்டு செல்வகுமார் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் விரக்தியுற்ற சங்கீதா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுபடி, திருமங்கலம் மகளிர் போலீசார் செல்வகுமார், அவரது தாய் பஞ்சு, சித்தப்பா மாரிச்சாமி, சித்தி முத்துலட்சுமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: