கொழும்பு: ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 9 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் ஆரோன் ஃபின்ச் பொறுப்புடன் ஆடி 62 ரன் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 10, லபுஷேன் 29 ரன் எடுத்து அவுட் ஆகினர். 121 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்க, பின்னர் வந்த வந்த அலெக்ஸ் கேரி 49, டிராவிஸ் ஹெட் 70 ரன், மேக்ஸ்வெல் 33 ரன்களை விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 291 ரன்களை குவித்தது.