சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி: தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 86.69 மீட்டர் தூரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் `பவுல்’ செய்த அவர், மூன்றாவது வாய்ப்பில் தடுமாறி விழுந்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடைசி 3 வாய்ப்புகளில் ஈட்டி எறியவில்லை. இருப்பினும்  நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் வீசிய தூரத்தை மற்ற வீரர்களால் முறியடிக்க முடியவில்லை.

இதனால் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். 2012 ஒலிம்பிக் சாம்பியனான டிரினிடாட்டின் கெஸ்ஹார்ன் (86.64 மீ.,) வெள்ளி பதக்கமும், உலக சாம்பியனான கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (84.75 மீ.,) வெண்கலம் பதக்கமும் வென்றனர். சோப்ரா, அடுத்து நடைபெற உள்ள டயமண்ட் லீக் போட்டிக்கான பயிற்சியை பின்லாந்தில் மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: