100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியம் தர வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது 61 ஊராட்சி உள்ளன. இதில்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் 2வது செவ்வாய்க்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கூறுகையில்,மாற்றுதிறனாளிகளுக்கு ரூ281 முழு சம்பளம் முழுமையாக வந்து சேர்வதில்லை. ஊராட்சிகளில் தொலை தூரங்களில் செயல்படும் பணிகளுக்கு எங்களால் சென்று பணியாற்ற இயலாதபோது, எங்களால் முடிந்த பணிகளை ஊராட்சிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஊராட்சிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பலருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டைகள் இல்லாத நிலையில் உள்ளனர். அதனை மீண்டும் புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர். இந்த மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உட்பட தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளை மேற்பார்வையிடும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Related Stories: