கோயிலுக்கு சொந்தமான காலி இடங்கள் ரூ1.76 லட்சத்திற்கு ஏலம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமையான ஸ்ரீஆதிசேகவப் பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டிற்கான 7,888 சதுர அடி பரப்பளவு உள்ள 9 காலி இடங்களுக்கான ஏலம் நேற்று கோயில் வளாகத்தில் நடைப்பெற்றது. இதற்கு செயல் அலுவலர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா முன்னிலை வகித்தார். டெண்டர் மற்றும் பொது ஏலம் மூலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இதில், அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு காலி இடங்கள் மூன்று வருடத்திற்கு ஏலம் விடப்பட்டதின் மூலம் கோயிலுக்கு ரூ1.76 லட்சம் வருமானம் கிடைத்தது. மேலும், ரூ21.12 லட்சம் வைப்புத்தொகையாக வசூலிக்கப்பட்டது.

Related Stories: