2 ஆண்டுக்கு பின் இந்தியர்கள் மீதான விசா தடை நீக்கியது சீனா

புதுடெல்லி: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசா தடை அமல்படுத்தப்பட்டது. இதனால், சீனாவில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள் இந்தியாவிலேயே தங்கி உள்ளனர்.இந்நிலையில், இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசா தடையை 2 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கி சீன அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், `கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்நாட்டில் சிக்கித் தவிக்கும், சீனாவில் பணிபுரியும் இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விசா வழங்கும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. சீனப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும் சீனா திரும்பி தங்களது படிப்பை தொடரலாம். அனைத்துத் துறைகளிலும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக சீனாவுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் அவர்களுடன் செல்லும் குடும்ப உறுப்பினர்களின் விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: