கோயில் கும்பாபிஷேகத்திற்காக பெங்களூரிலிருந்து கோவில்பட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்; மகன், பேரன் ஆசையை நிறைவேற்றிய கும்மிடிப்பூண்டி வியாபாரி

கோவில்பட்டி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்தார். நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் வசிக்கிறார். தந்தையும்  மகன் நடராஜனும் அங்கு இரும்பு கடை வைத்துள்ளனர். ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பது நடராஜன், அவரது மகன் மோகித்திற்கு் ஆசை.

இதையடுத்து மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்ற கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலம் செல்ல பாலசுப்பிரமணியன்  ஏற்பாடு செய்தார். அதன்படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி,  மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தெற்கு தீத்தாம்பட்டி வந்து விழாவில் பங்கேற்றனர்.தங்கள் ஊருக்கு மேல் ஹெலிகாப்டர் 2முறை சுற்றியதை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

Related Stories: