மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3வது வாரத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஜனவரி 31ம் தேதி துவங்கியது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரைக்கு மறுநாள் ஒன்றிய பொது பட்ஜெட்டு தாக்கலானது. இதன் முதல் பாகம் கடந்த பிப்ரவரி 11ல் முடிவடைந்தது. பிறகு இரண்டாம் பாகம் மார்ச் 14ல் துவங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு நாள் முன்பு கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி  ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியான ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Related Stories: