மன்னார்குடி பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மன்னார்குடி : மன்னார்குடி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பத்மனாபன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. செயலாளர் இளங்கோவன், துணைதலைவர் ரத்னசபாபதி, ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

கூட்டத்தில், மாலை நேரங்களில் மன்னார்குடி காந்திரோடு, பந்தலடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும். கீழ 3ம் தெரு குழந்தைகள் மருத்துவமனை அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் மாடு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிற்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தான்யா வரவேற்றார். அய்யப்பன் நன்றி கூறினார்.

Related Stories: