ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சீனா

பெர்லின்: எரிபொருள் மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைன் மீது போரை தொடங்கிய 100 நாட்களில் மட்டும் ரஷ்யா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி என ரூ7.56 லட்சம் கோடிக்கு விற்று தீர்த்துள்ளது. இதில் படிம எரிபொருள் மட்டும் ரூ4.60 லட்சம் கோடிக்கு இந்த 100 நாட்களில் விற்கப்பட்டுள்ளது. இது மொத்த விற்பனையில் 61 சதவீதமாகும்.இதில் ரூ98,435 கோடி ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் ஈட்டப்பட்ட வருவாயாகும். போர் தொடங்கிய 2 மாதங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் படிம எரிபொருள் இறக்குமதி செய்த நாடாக முதல் இடத்தில் இருந்தது. சீனா ரூ1.02 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்து 2வது இடத்தில் இருந்தது.இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு, படிம எரிபொருள் கொள்முதலில், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி சீனா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: