நபிகள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம் போராட்டத்தில் ஈடுபடும் இந்தியர்கள் நாடு கடத்தல்: குவைத் அரசு நடவடிக்கை

துபாய்: முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிராக சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகமது நபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கண்டித்து, துபாயில் பகாஹீல் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின்பு, முகமது நபிக்கு ஆதரவாக வெளிநாடு வாழ் முஸ்லிம்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளில் போராட்டம் நடத்த சட்டப்படி அனுமதி கிடையாது. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டினர் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இந்நிலையில், சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் உளவுப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்த பிறகு, அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் மீண்டும் குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக சவுதி வெளியுறவு அமைச்சகம் அந்தந்த நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. குவைத்தில் உள்ள இந்திய தூதர் சிபி ஜார்ஜூக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.நுபுருக்கு சம்மன் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அவர் வரும் 20ம் தேதி நார்கேல்தங்கா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வரும்படி கேட்டு கொண்டுள்ளது. இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கான்டாய் காவல் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவாகி உள்ளது.

Related Stories: