சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; குன்னூர் சுற்றுலா தலங்கள் களை கட்டியது: வணிகர் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி

குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசன் நிறைவடைந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் குன்னூர் சுற்றுலா தலங்கள் களை கட்டியுள்ளது. இதனால், வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை சீசன் களை கட்டியது. சீசனை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்தனர். இதனால், மாவட்டமே களை கட்டியது.

இதனால், வணிகர் மற்றும் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சீசன் முடிந்ததும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும். ஆனால், தற்போது வரை கூட்டம் குறையாமல் வருகை அதிகரித்துள்ளது. இதனால், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களான காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக், சிம்ஸ் பூங்காவில்  கூட்டம் அலைமோதி வருகிறது.

சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி செய்ய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: