திருப்பதி அடுத்த பேரூரில் 23ம் தேதி வகுளமாதா கோயில் கும்பாபிஷேகம்: தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி அடுத்த பேரூர் வகுளமாதா கோயிலில்  வருகிற 23ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தலைமை செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருப்பதி அடுத்த பேரூரில் உள்ள குன்று மீது புதிதாக வகுளமாதா கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் கட்டுமான பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று காலை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர்.

அப்போது, அவர் பேசியதாவது: திருமலை  வெங்கடேஸ்வர சுவாமியின் தாயாரான வகுளமாதா கோயில் பழங்காலத்திலிருந்தே பேரூர் குன்றின் மீது இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக, இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. மாநில அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரரெட்டி வகுளமாத கோயிலை தனது மேற்பார்வையில்  பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை(இன்று) காலை மாநில அமைச்சர்களுடன் கோயிலில் நடக்கும் பணிகளை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய உள்ளேன்.

வருகிற 23ம் தேதி(வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது இணை செயல் அதிகாரிகள் வீரபிரம்மன், சதா பார்கவி, அறங்காவலர்  குழு உறுப்பினர் போகலா அசோக்குமார், முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: