ஆவடி, திருமுல்லைவாயல் காவல் நிலையங்களில் போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு

ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயல் காவல் நிலையங்களில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் ஆய்வு செய்தார்.  ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று ஆவடி காவல் நிலையம், திருமுல்லைவாயல் காவல்நிலையம், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் ஆகிய 3 காவல்நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன், திருமுல்லைவாயல் ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் ஆவடி காவல் நிலையத்தில் உள்ள போலீசார் ஓய்வு அறை, கைதிகளை அடைக்கும் அறை, கழிவறைகள் உள்ளிட்டவைகளை சுற்றிபார்த்து அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார். மேலும், காவல் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருந்ததை பாராட்டினார். பின்னர், கடந்த ஒரு வருடமாக ஆவடி ஆணையரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி வழக்குகளை நுண்ணறிவுடன் திறம்பட செயல்பட்டு கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

Related Stories: