காஞ்சிபுரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், திராளன பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்று சென்றனர். காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. காஞ்சிபுரம் சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் மங்கள இசை வாத்தியங்களுடன் புனித நீர் கூடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பரிவார தெய்வங்களான படவேட்டம்மன், பச்சையம்மன், விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தன. கோயில் அர்ச்சகர் பிச்சாண்டி சிறப்பு அபிஷேகங்களை நடத்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தேவஸ்தான திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

Related Stories: